Skip to main content

“என்ன மாதிரி சூழ்நிலையில் பணியாற்றுகிறோம் தெரியுமா?” -கலக்கத்தில் காவல்துறை!

Published on 12/03/2018 | Edited on 12/03/2018
aswini

 

திருச்சி – திருவெறும்பூர் அருகே, உஷா என்பவரை டிராபிக் இன்ஸ்பெக்டர் காமராஜ் துரத்திச் சென்றபோது, அந்தப் பெண் விபத்தில் சிக்கி பலியானார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறையினரை, சமூக வலைத்தளங்கள் காய்ச்சி எடுத்து வருகின்றன.  ஒருகட்டத்தில், ‘பொறுத்தது போதும்; பொங்கி எழுவோம்’ என்று காவல்துறையினரும் அதே சமூக வலைத்தளங்களில் பதிலடி தந்து, எதிர்வினையாற்றி வருகின்றனர். 

 

இந்த நிலையில், “ரொம்பவும் அக்கப்போரா இருக்கு.. நாங்களும் மனுஷங்கதான்..” என்று நம்மிடம் சலித்துக்கொண்ட சென்னை ஏரியா இன்ஸ்பெக்டர் ஒருவர் “ரெண்டு நாளைக்கு முன்னாடி, காலேஜ் வாசல்ல வச்சு.. அஸ்வினிங்கிற பெண்ணை அவளோட காதலன் அழகேசன் கத்தியால குத்திக் கொன்னுட்டான். ரெண்டு பேரும் சேர்ந்து பல இடங்கள்ல சுத்தியிருக்காங்க. அஸ்வினிக்கு அவன் நெறய செலவு பண்ணிருக்கான். திடீர்ன்னு அஸ்வினி பின்வாங்க, அழகேசன் கத்திய எடுத்து சொருகிட்டான். நடந்தது இதுதான். ஆனா.. அஸ்வினி வீட்டுல, நாங்க கம்ப்ளைண்ட் கொடுத்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்கலைன்னு சொல்லுறாங்க. லவ் மேட்டர்ன்னா.. புகாரை விசாரிச்சு சமரசம் பண்ணி வைக்கிற நடைமுறை இருக்கு. அவன் அவளைக் கத்தியால குத்துவான்னு போலீஸுக்கு முன்கூட்டியே எப்படி தெரியும்? காலேஜுக்கு போற  எல்லா பொண்ணுங்க பின்னாடியும் போலீஸ்காரங்க போயி பாதுகாப்பு கொடுக்க முடியுமா? 

 

அடுத்து, இன்னொரு சம்பவம். இன்னைக்கு எங்க லிமிட்ல இருக்கிற ஒரு வீட்ல உள்ள லேடிக்கும் பக்கத்து வீட்டு லேடிக்கும் தகராறு. இது சம்பந்தமா ஒரு லேடி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க. நானும் அந்த கம்ப்ளைன்ட் பார்ட்டிய விசாரிக்கப் போனேன். நைட்டில இருந்த அந்த லேடிகிட்ட ‘உன்மேல ஒரு கம்ப்ளைன்ட் வந்திருக்கு. விசாரிக்கணும். வாம்மா ஸ்டேஷனுக்கு’ன்னு கூப்பிட்டேன். உடனே அந்த லேடி “துணிய மாத்தணும். புடவைய கட்டிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு, விட்டுக்குள்ள போயி கதவை பூட்டிக்கிருச்சு. அப்ப லேசா மண்ணெண்ணெய் வாசம் வீட்டுக்குள்ள இருந்து வந்துச்சு. இது என்னடா வம்பா போச்சுன்னு நான் சுதாரிச்சு.. பக்கத்து வீட்டுக்காரங்க உதவியோடு, கதவை உடைச்சு, அந்த லேடிய காப்பாத்திட்டேன். ஒருவேளை, அந்த லேடி தீயை பத்த வச்சிருந்தா நிலைமை என்னாயிருக்கும்? விசாரணைங்கிற பேர்ல அநியாயமா ஒரு பெண்ணை கொன்னுட்டாங்கன்னு பேப்பர்ல நியூஸ் வரும். புகாரை சரியாக விசாரிக்காமல் விட்டால், புகார் கொடுத்த லேடி எதாவது விபரீத முயற்சியில் ஈடுபடுவாங்க. இல்லைன்னா.. எங்கள பத்தி மேலதிகாரிகிட்ட கம்ப்ளைன்ட் கொடுப்பாங்க. விசாரணைன்னு வந்தா..  எல்லாத்துக்கும் நாங்க பதில் சொல்லியாகணும்.  எந்த மாதிரி சூழ்நிலைல நாங்க ட்யூட்டி பார்க்கிறோம்கிறத நீங்களே பாருங்க.” என்றார் விரக்தியுடன்.  

 

கடமை தவறும் காக்கிகளும் இருக்கவே செய்கிறார்கள். அதற்காக, எல்லா நேரங்களிலும் காவல்துறையினர் தவறாகவே நடக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.  காவலர்களும் மனிதர்களே!

சார்ந்த செய்திகள்

Next Story

12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (21.04.2023) ஏஐடியூசி சென்னை மாவட்ட குழு சார்பில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துகிற தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

 

Next Story

பள்ளி மாணவர்களுக்கு போதை குளிர்பானம் சப்ளை; சமூக விரோத கும்பலுக்கு போலீசார் வலை!

Published on 05/12/2021 | Edited on 05/12/2021

 

 

school student cooldrinks police investigation

 

சேலத்தில், பள்ளி மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடிக்க வைத்து, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

சேலத்தை அடுத்த சித்தனூரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 32). இவருக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான். 

 

கடந்த டிசம்பர் 1- ஆம் தேதி மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு அரை மயக்க நிலையில் தள்ளாடியபடியே சென்றிருக்கிறான். அவனிடம் பெற்றோர் விசாரித்தனர். பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் கும்பல், தன்னிடம் குளிர்பானத்தை கொடுத்து குடிக்கச் சொன்னதாகவும், அந்த குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து இருப்பது தெரியாமல் குடித்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறான். 

 

அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயார் ராஜலட்சுமி, இதுகுறித்து இரும்பாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணையில், பர்ன் அன் கோ தொழிற்சாலை அருகே வசிக்கும் சில வாலிபர்கள் வசதியான வீட்டு பள்ளி மாணவர்களைக் குறி வைத்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தைக் குடிக்க வைக்கின்றனர். அவர்கள் போதையில் ஆடுவதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மாணவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.

 

போதை குளிர்பானம் சப்ளை செய்யும் கும்பலைக் கூண்டோடு பிடிக்க மாநகர காவல்துறையினர் திட்டமிட்டுள்ளது. இதற்கென தனிப்படை அமைத்து, அந்த கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.