காஞ்சி சங்கரமடத்துக்குள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று அதாவது, சங்கரமடத்தில் மகா பெரியவர்னு சொல்லப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு 90-களில் கனகாபிஷேக விழா நடந்தது. ஜெயேந்திரர் முன்னின்று நடத்திய இந்த விழாவில், சசிகலாவோடு ஜெ.வும் கலந்துக்கிட்டார். இதில் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் நிறைய முறைகேடுகள் செய்யறதா, மடத்துக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், பின்னாளில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் ஆகியோர் புகார் செஞ்சாங்க. விஜயேந்திரரும் ஆடிட்டர் குருமூர்த்தியும் விழா அன்னைக்கு ஒருமையிலே திட்டிக்கிட்டாங்க.
அப்ப விஜயேந்திரருக்காக வரிஞ்சுகட்டியவர் ஜெயேந்திரர். ஆடிட்டர் குருமூர்த்தியைப் பார்த்து, ’முதல்ல நீ மடத்தை விட்டு வெளியே போ’ன்னு சத்தம் போட்டிருக்கார். இதனால் மேலும் கோபமடைந்த ஆடிட்டர் குருமூர்த்தி, விஜயேந்திரரைப் பார்த்து, ’உன் வண்டவாளம் முழுதையும் அம்பலமாக்குவேன்னு எச்சரிச்சாராம். இப்ப அந்த பவரைக் காட்டுறதாலதான், சங்கரமடத்தில் சங்கடம்னு சொல்றாங்க.அப்படி என்ன சங்கடம் என்று விசாரித்தபோது,பழைய சண்டைக்குப் பிறகு, மடத்துப் பக்கமே போகாம இருந்த ஆடிட்டர் குருமூர்த்தி, ஜெயேந்திரர் மரணத்துக்கு அப்புறம்தான் அங்கே போனாரு.
இப்ப சங்கரமடத்தின் சர்வ அதிகாரங்களும் ஆடிட்டர் குருமூர்த்தி கையிலதான். மடத்தோட கணக்கு வழக்குகள் தொடங்கி எல்லாமும் அவரே பார்த்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.விஜயேந்திரரையும் தன் விருப்பப்படி ஆடிட்டர் இப்ப ஆட்டிவைக்க ஆரம்பிச்சிட்டார்னு மடத்து ஆட்களே சொல்றாங்க. இதிலே இன்னொரு விவகாரமும் உண்டு. தோண்டத் தோண்ட பூதம் கிளம்பும் போலத் தெரியுதே என்று மேலும் இது பற்றி விசாரித்தபோது, கௌரி காமாட்சிங்கிற பெண்மணி, திருவனந்தபுரத்தில் மடத்துக்குச் சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியை நடத்திக்கிட்டு வர்றாராம். இப்ப அந்தக் கல்லூரியை ஒப்படைக்கணும்னு ஆடிட்டர் தரப்பு அந்தப் பெண்மணியை மிரட்டியதாம்.
அந்த மிரட்டல்களை எல்லாம் அப்படியே ஆடியோவாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறாராம் கௌரி காமாட்சி. ஜெயேந்திரர்தான் கௌரியிடம் கல்லூரி நிர்வாகத்தை ஒப்படைத்தார்னு சொல்லும் மடத்து தரப்பு, கௌரிக்கு கல்யாணம் பண்ணி வைப்பதில் ஜெயேந்திரர் காட்டுன அக்கறையையும் ஞாபகப்படுத்துறாங்க. கௌரிக்கு இப்ப நெருக்கடியான சூழல்னு சொல்றாங்க.