Skip to main content

’ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை’ - எய்ம்ஸ் மருத்துவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

Published on 23/08/2018 | Edited on 23/08/2018
jaya

    
ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை.  சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் அழைக்கப்படவில்லை.   சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்.

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரினை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது  தமிழக அரசு. இதையடுத்து விசாரணை ஆணையம் ஜெயலலிதா தொடர்புடைய அனைவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி, அதன்படி தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

 

 ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

 

சம்மனை அடுத்து  எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு  ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.  அப்போது, ’’ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை.  சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் அழைக்கப்படவில்லை.   சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம். ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டோம்” என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்ததாக ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வட்டாரம்  தகவல்கள் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்