Skip to main content

அதிமுகவை தொடர்ந்து அமமுக கூட்டணியும் உடைந்தது - விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

ு

 

தமிழ்நாட்டில் ஏற்கனவே விடுப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இன்று (15.09.2021) காலைமுதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. மேலும், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், விருப்பமனு தாக்கல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன. விருப்பமனு வழங்க யாருக்கு எவ்வளவு தொகை என்பன உள்ளிட்ட தகவல்களைத் திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ளது. 

 

இது ஒருபுறம் இருக்க, பிரதான கட்சிகளின் கூட்டணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்துவந்த பாமக, அதிமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. சில கட்சிகள் திமுகவுக்கு கூடுதலாக ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், கடந்த தேர்தலில் அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை வாயிலாக உறுதிபடுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்