Skip to main content

‘எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் அர்த்தம்’ -முதல்வர் இல்லத்தில் விஜய்சேதுபதி!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020
eps

 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்குப் பிறகு சென்னைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தங்களது ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், பாக்கியராஜ் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

இந்நிலையில் 800 பட சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து முதல்வருக்கு நேரில் ஆறுதல் கூறினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 

ஏற்கனவே 800  படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என முரளிதரன் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அதற்கு நன்றி வணக்கம் என விஜய் சேதுபதி ட்வீட் செய்திருந்ததார்.  இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் சேதுபதி இதுகுறித்த கேள்விக்கு, நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்து விட்டது, முற்று புள்ளி வைத்தாகிவிட்டது, இனி பேச ஒன்றுமில்லை என்று தான் அர்த்தம் என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்