Skip to main content

“உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி” - த.வெ.க தலைவர் விஜய்

Published on 01/05/2024 | Edited on 01/05/2024
Vijay congratulated on Labor Day

உலக உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி (01/05/2021) அன்று இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து உழைப்பாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் அண்மையில் அரசியல் கட்சியைத் தொடங்கிய த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் உழைப்பாளர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகிற்குப் பறைசாற்றும் இந்த மே தினத்தில், தொழிலாளர் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை மனதில் கொண்டு அவர்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்