Skip to main content

விஎச்பி ரத யாத்திரை - 144 தடை உத்தரவு

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
vhp

நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விஎச்பி ரத யாத்திரை நாளை வருவதை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

விஎச்பி ரத யாத்திரை கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்கு வருகிறது.  இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக, மதிமுக, நாம் தமிழர், மமக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.  ரத யாத்திரையை மறிக்கப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கூறிவருகின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

சிறையில் சந்திரபாபு நாயுடு; ஆந்திர முழுவதும் 144 தடை பிறப்பிப்பு

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

nn

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் கைது விவகாரம் தொடர்பான வழக்கில் விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணி நேரமாக இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது.  தீர்ப்பில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது நீதிமன்றம். இந்த உத்தரவைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்ல போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

 

ஏற்கனவே விசாரணைக்காக சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டபோது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றதால் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டனர். பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு அவருடைய அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக சிறைக்குச் செல்ல இருப்பதால் இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் என்ற கோணத்தில் ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, கொண்டாட்டங்கள், கூட்டமாக செல்வது போன்றவற்றுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி மாநிலம் தழுவிய நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் அச்சன் நாயுடு இதற்கான அழைப்பை வெளியிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

Next Story

கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு... அண்டை மாவட்ட போலீசார் குவிப்பு!

Published on 17/07/2022 | Edited on 17/07/2022

 

144 Prohibitory Order in Kallakurichi... Neighboring district police gathering!

 

கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்து வந்த  பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழப்பில் மர்மம் நீடிப்பதாக மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறை வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிற நிலையில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.

 

தற்போது நடைபெற்ற பிரேப் பரிசோதனை அறிக்கையில் தெளிவு இல்லை எனக்கூறி கடந்த ஐந்து நாட்களாக மாணவியின் உடலைப் பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற கல்வீச்சு அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த நினைத்த நிலையில் போராட்டம் கட்டுக்கடங்காததால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி போராட்டக்காரர்களை எச்சரித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் அங்கு இருந்த காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் மேலும் பலர் குவிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. இந்த கலவரத்தில் டி.ஐ.ஜி பாண்டியன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

 

'பள்ளி வளாகத்தை தாக்குவது, காவல் வாகனத்தை தாக்குவது, காவல்துறையினரை தாக்குவது போன்ற சம்பவங்களை தொடர்ந்து நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வீடியோ பதிவு ஆதாரங்களுடன் பிற்காலத்திலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்' என தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

144 Prohibitory Order in Kallakurichi... Neighboring district police gathering!

 

தற்பொழுது கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். அதேபோல் பாதுகாப்பிற்காக அண்டை மாவட்ட போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், ''இரண்டு மூன்று நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவர்களிடம் நாம் பேச்சுவார்த்தையில் தான் இருந்தோம். இன்று பல்வேறு குழுவினர்கள் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக திடீரென அசம்பல் ஆகிவிட்டார்கள். இதனால் வன்முறை சம்பவங்கள் காலை நிகழ்ந்துவிட்டது. காவல்துறை பாதுகாப்பு இரண்டு மூன்று நாட்களாக கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் போராட்டக்காரர்கள் எண்ணிக்கை நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது'' என்றார்.