Skip to main content

வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு! 

Published on 25/05/2022 | Edited on 14/07/2022


 

Veerappan's brother Madhayan incident at salem prison

 

வனச்சரகர் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த வீரப்பனின் அண்ணன் மாதையன் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 

 

சத்தியமங்கலத்தில் வனச்சரகர் சிதம்பரம் கொலை வழக்கு தொடர்பாக, கடந்த 1987- ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற மாதையன், சேலம் மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், பல்வேறு உடல்நிலை கோளாறால் அவதியுற்று வந்த மாதையன், கடந்த மே 1- ஆம் தேதி அன்று நெஞ்சுவலி காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (25/05/2022) அதிகாலை மாதையன் உயிரிழந்தார். இதையடுத்து, மூலக்காட்டில் உள்ள அவரது நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. 

 

சார்ந்த செய்திகள்