Skip to main content

வைகோ வழங்கும் விருது... 

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
vaiko


மதிமுக பொதுக்செயலாளர் வைகோவால் தொடங்கப்பட்டு இயங்கி வருவது 'பைந்தமிழ் மன்றம்' எனும் இலக்கிய மன்றம். திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இதன் சார்பில் இன்று (மார்ச் 16) மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் வைகோ தலைமையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு  'இயற்றமிழ் வித்தகர்' விருதும் பொற்கிழி வழங்கும் விழாவும் நடைபெற இருக்கிறது.
 

 எஸ்.ஏ. பெருமாள் தலைமை தாங்கும் இவ்விழாவில் செ. திவான் வரவேற்புரையும், கவிஞர் தங்கம் மூர்த்தி வாழ்த்துரையும் வழங்க இருக்கின்றனர். இந்த விழாவைப் பற்றியும் விருது வழங்கும் வைகோவை பற்றியும், "நான் விரும்பும் தமிழ் அரசியல்வாதிகளில் வைகோ அவர்களும் ஒன்று. அவர் ஒரு இலக்கியவாதி அதுவும் அவர் கையால் முதன் முதலில் விருது வாங்க இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. இலக்கியவாதிகளை கவுரப்படுத்தும் வகையில் வருடா வருடம் அவர் இந்த நிகழ்ச்சிகளை நடத்த இருப்பதாக தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது" என்று எஸ்.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்