Skip to main content

ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் அமோக வெற்றி!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

jlk

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஒன்றியம் எத்திலோடு ஊராட்சியில் இருக்கும் 13-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கான ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். திமுக வேட்பாளரான தியாகு அதிமுக வேட்பாளர் உதயகுமாரை விட 723 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

 

வெற்றி சான்றிதழ் பெற்ற திமுக வேட்பாளர் தியாகுக்கு மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சௌந்தர பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் வெற்றியை திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

 

klj

 

 

 

சார்ந்த செய்திகள்