Skip to main content

உளுந்தூர்பேட்டை விபத்து: 4பேர் பலி...!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தின் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த, திண்டுக்கல் சிலுவை தெருவை சேர்ந்த மல்லிகா, நிஷா மற்றும் அவருடன் அவருடைய குழந்தைகள் இரண்டு பேர், டிரைவர் உட்பட ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

 

Ulundurpet Accident

 



இன்று பகல் நிலைதடுமாறி கார் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கார் தடுப்புக் கட்டையை தாண்டி நெடுஞ்சாலையில் தடம் புரண்டு விழுந்தது. அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த தனியார் பேருந்தும் காரின் மீது  நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் கோர விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் திண்டுக்கல் சேர்ந்த மல்லிகா, நிஷா, 3 வயசு குழந்தை மற்றும் கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் உள்ளே ஒரு குழந்தை பலத்த காயத்துடன் உயிருடன் இருந்தது.

அந்த குழந்தையை திருநாவலூர் போலீசார் ஜேசிபி இயந்திரத்தை வைத்து கார் மேல் இருந்த தனியார் பேருந்தை தள்ளி விட்டு, காரின் உள்ளே விபத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்து கிடந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். தனியார் பேருந்தில் 24 பேர் சிறு காயங்களுன் பிழைத்தனர். இந்தக் கோர விபத்தால் ஒரு மணி  நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

சார்ந்த செய்திகள்