Skip to main content

'உதயநிதி ஸ்டாலினின் தலையீடுதான் காரணம்' -நீக்கப்பட்ட எம்.எல்.ஏ கு.க.செல்வம் பேட்டி...

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 'Udayanithi Stalin's intervention is the reason' - Dismissed MLA KK Selvam interview !!

 

 

ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க. செல்வம் அண்மையில் டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசியதை அடுத்து தி.மு.க. தலைமை கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியதோடு கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. 

 

இதற்கு  எம்.எல்.ஏ. கு.க. செல்வம் பதில் கடிதம் ஒன்றை அளித்தார். அதில்,  சஸ்பெண்டை வாபஸ் பெறுங்கள். இயற்கை நீதிக்கு விரோதமானது என்பதால் என்னை சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுங்கள். பாஜகவைச் சேர்ந்த பிரதமர் மோடி கலைஞரை நேரில் சந்தித்து அனைவருக்கும் தெரியும். கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. நான் பொய்யாக, அவதூறாக என்ன சொன்னேன் என நோட்டீஸ் கடிதத்தில் இல்லை என விளக்கம் அளித்திருந்த நிலையில், நேற்று திமுகவிலிருந்து கு.க.செல்வம் எம்.எல்.ஏ. நீக்கப்பட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வம் உரிய விளக்கம் தராததால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

 

தி.மு.கவின் அனைத்து அடிப்படை பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. கு.க.செல்வம், கட்சி சார்பின்றி இனி எம்.எல்.ஏ பணி ஆற்ற இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

 

“என்னை கட்சியிலிருந்து நீக்கியது ஜனநாயக படுகொலை. யார் எனக்கு வாய்ப்பு கொடுப்பார்களோ அவர்கள் கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன். தற்போது எந்த கட்சிக்கும் செல்ல நான் விரும்பவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. உதயநிதி ஸ்டாலினின் தலையீடுதான் எனது பிரச்சனைக்கு காரணம்” என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்