Skip to main content

திமுக, அதிமுகவை எதிர்த்திருக்கிறேன்... ஆனால் ஒரு நாளும் இவ்வகையான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை... வைகோ பதில்

Published on 20/05/2018 | Edited on 20/05/2018
vaiko


அரியலூர் மாவட்டம், திருமானூரில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி, கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்புகுழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
 

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். திருச்சியில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும், ம.தி.மு.க. கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து வைகோவிடம் கேட்டபோது,
 

 “தி.மு.க., அ.தி.மு.க.வை எதிர்த்து அரசியல் செய்து வந்துள்ளேன். ஆனால் ஒரு நாளும் எனக்கு எதிராக இவ்வகையான பிரச்சினைகள் ஏற்பட்டதில்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். எனினும் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்