Skip to main content

டி.டி.வி. ஒழிக! ஒ.பி.எஸ். ஒழிக! இரு அணிகளுக்கு இடையே பரபரப்பு

Published on 07/03/2018 | Edited on 07/03/2018


 

opsttv


தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிகழ்சிகளுக்காக ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினரான டிடிவி தினகரன் மதுரையில் இருந்து தேனி செல்ல இருந்தார். அப்பொழுது உடன் இருந்த டிடிவி ஆதரவாளர்களோ, திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் தாயார் அலமேலு அம்மாள் வத்தலக்குண்டில் காலமாகி விட்டார் என்ற தகவலை டிடிவியிடம் சொல்லி இருக்கிறார்கள்.
 

உடனே டிடிவியோ ஐபியின் தாயார் மறைவுக்கு போய்விட்டு தேனி போகலாம் என்று கூறிவிட்டு உடனே வத்தலக்குண்டு வந்தார். அதற்குள் ஐபியின் தாயார் உடல்  அடக்கம் செய்யப்பட்டது. அப்படி இருந்தும்கூட ஐபியின் வீட்டுக்கு சென்று தாயாரின் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு சிறிது நேரம் ஐ.பி.யிடம் உட்கார்ந்து பேசி விட்டு, பெரியகுளம் வழியாக தேனிக்கு புறப்பட்டார். ஐ.பி. எதிர்கட்சிகாரராக இருந்தாலும்கூட துக்கம் விசாரிக்க டிடிவி சென்றதை கண்டு மாற்று கட்சிகார்களை அசந்து போய் விட்டனர்.
 


இந்த நிலையில் தான் ஏற்கனவே பெரியகுளத்தில் டிடிவி ஆதரவாளர்கள் டிடிவி வருகையை ஒட்டி அங்கங்கே பிளக்ஸ் பேனர்களை வைத்து இருந்தனர். இது ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. திடீரென அரசியலில் குதித்த ஒபிஎஸ் மகனான ரவீந்திரநாத் வருகிற 11ம் தேதி ஜெயின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இளைகஞர் இளம் பெண் பாசரை சார்பில் 7070 பயணாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்க  இருக்கிறார் அதற்காக அங்கங்கே பிளக்ஸ் பேனர்களை ஒபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்து வருகிறார்கள். அதுபோல் பெரியகுளத்திலும் வைத்து வந்தனர்.
 

அப்பொழுது மூன்றாம் தென்றல் அருகே ஏற்கனவே டிடிவி ஆதரவாளர்கள் பேனர் வைத்து இருந்தனர். அந்த  இடத்தில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பேனர் வைக்க முடிவு செய்து அதை கழட்ட பார்த்தனர். இந்த விஷயம் டிடிவி ஆதரவாளர்களுக்கு தெரியவே அந்த பேனரை கழட்டகூடாது என 50க்கும் மேற்படடோர் அங்கு திரண்டு வந்து ஒபிஎஸ் ஆதரவாளர்களோடு பிரச்சனை செய்தனர். 
 

இதனால் டென்ஷன் அடைந்த ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அந்த பேனரை உடனே கழட்ட வேண்டும் என கூறி பஸ் மறியலில் குதித்தனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. அதன் பின் காக்கிகள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தியும் கூட சமாதானம் ஆகவில்லை. இதனால் டென்ஷன் அடைந்த போலீசார் இரு தரப்பினரும் வைத்த பேனர்களை கழட்ட உத்திரவிட்டதின் பேரில் பேனர்களையும் கழட்டினார்கள். அதற்குள் தேனி செல்ல டிடிவி இந்த பக்கம் வந்து கொண்டு இருக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு எட்டவே இரு தரப்பினரையும் ஒழுங்கு படுத்தி வந்தனர். டிடிவி கார் வந்து விடவே அங்கு இருந்த ஒபிஎஸ் ஆதரவாளர்களோ டிடிவி ஒழிக... என கோஷம் போட்டனர். இதனால் டென்ஷன் அடைந்த டிடிவி ஆதரவாளர்களும் ஒபிஎஸ் ஒழிக... ஒபிஎஸ் ஒழிக... என குரல் கொடுத்தனர். இதனால் இரு தரப்பினரும் கோஷம் மிட்டவாரே மோதிக்கொள்ளும் சூழ்நிலை தெரியவே, உடனே அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதற்குள் டிடிவியும் தேனி சென்று தனியார் விடுதியில் தங்கி விட்டார். 
 

இருந்தாலும் மாவட்டத்தில் இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட பிளக்ஸ் பேனர் பிரச்னை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிக்காக டிடிவி செல்ல இருப்பதால் பதட்டமான சூழல் உருவாகி வருகிறது.

   
 

சார்ந்த செய்திகள்