Skip to main content

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திருநங்கை!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2 வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை பெறுவதற்காக காத்திருக்கும் சூழ் நிலையில் நக்கீரனுக்கு பேசுகையில், மனம் நிறைந்த சந்தோசமாக இருக்கிறது. இதற்கான அனைத்தும் பெருமையும் திமுகாவையே சாரும். அதற்காக நான் திமுகவிற்கும், தலைவர் மு.க ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Transgender win in local election


எங்களுடைய பயணம் அதிகாரத்தை நோக்கியப்பயணம். இந்த பயணத்தில்  திருநங்கை மேயராகவும் இருந்துள்ளனர். அது குஜராத்தில் தான் தமிழகத்தில் இல்லை, முதல்முறையாக இந்த வாய்ப்பு எங்களுக்கு இந்த அரசு அங்கீகாரம் கொடுக்காத சூழ்நிலையில் இந்த பொது சமூகம் எங்களுக்கு முதன் முறையாக அங்கீகாரம் கொடுத்துள்ளனர். அதற்காக நான் முழு மூச்சோடு செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

 

  

சார்ந்த செய்திகள்