Skip to main content

அதிமுகவில் இணைந்த பாஜக முக்கிய நிர்வாகி; தேர்தல் நேரத்தில் பரபரப்பு

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் பாஜகவின் பட்டியல் அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி தற்போது அதிமுகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வந்த தடா பெரியசாமி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜகவில் இடம் கிடைக்காததால் அவர் அதிமுகவில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை தடா பெரியசாமி எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்