Skip to main content

டெம்போ டிராவலர் உட்பட நான்கு வாகனங்களை திருடிய திருட்டு கும்பல் கைது!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

கடந்த 21.05.2019 அன்று 16.30 மணிக்கு புதுச்சேரி சன்முகாபுரத்தை சேர்ந்த பெருமாள்(35) என்பவர் புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பிப்டிக் மெயின் ரோட்டில் கலம்காத்த மாரியம்மன் கோவில் அருகில் நிறுத்தியிருந்த டெம்போ டிராவலர் வண்டியை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டதாக மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார்கொடுத்தார். அதன் பேரில்,  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 
 

puducherry police

 

இதுசம்பந்தமாக புதுச்சேரி மாநில முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபூர்வகுப்தா உத்தரவின் பேரில் காவல் கண்கானிப்பாளர் (வடக்கு)  ஜிந்தா கோதண்ட ராம் மேற்பார்வையில் மேட்டுபாளையம் வட்ட ஆய்வாளர் ஷண்முகசுந்தரம் தலைமையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவலர்கள் குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
 

puducherry police

 

அதையடுத்து அரியாங்குப்பம் நடராசன் மகன் ரமேஷ்(23),  செல்வம் மகன்  அசோக் (22)  தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் காந்திபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் பிரபு(36), உடுமலைப்பேட்டை ஆறுமுகம் மகன் முருகானந்தம்(எ)விமல்(23) ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்தனர். விசாரணையில்  ரமேஷ் மற்றும் கூட்டாளிகள்  சம்மந்தப்பட்ட  டெம்போ டிராவலர் வண்டியையும், புதுச்சேரி தன்வந்திரி காவல் நிலைய சரகத்தில் திருட்டு போன  டாட்டா ஏஸ்  வண்டியையும், தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டம், வீரப்பாண்டி காவல் சரகத்தில் திருட்டு போன டாட்டா ஏஸ் வண்டியையும் மற்றும் நம்பர் பிளேட், இஞ்சின் நம்பர், சேஸ் நம்பர் இல்லாத டாட்டா ஏஸ்  ஆகிய நான்கு வண்டிகளை வெவ்வேறு இடங்களிலிருந்து திருடியது தெரிய வந்தது. 

 

அவற்றின் மதிப்பு சுமார் ரூபாய் 12 லட்சம் இருக்கும். ரமேஷ் மற்றும் அசோக் ஆகியோர் மீது லாஸ்பேட்டை, தன் வந்திரி நகர் மற்றும் முதலியார்பேட்டை காவல் நிலையங்களில் ஏற்கனவே 6 வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. மேற்படி நபர்களை கைது செய்த போலிசார் அவர்கள் திருடிய  வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.