Skip to main content

வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

The teenager who made wrong decision due to dowry

 

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா (25). இவரும் புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (30) என்பவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தின்போது பெண் வீட்டார் 18 பவுன் நகையும் ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். விஜயகுமார் மற்றும் சினேகா தம்பதியினர் திருச்சியில் தனியாக வசித்து வந்தனர். 

 

கடந்த சில மாதங்களாக விஜயகுமார் தனது மனைவி சினேகாவிடம் வரதட்சணை நகை குறைவாக உள்ளதாகவும் புதியதாகத் தொழில் தொடங்குவதற்காக நகையும் பணமும் கேட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் விஜயகுமாரின் தாயும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வேறு ஒரு திருமணத்தை தனது மகனுக்கு செய்து வைக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கணவர் விஜயகுமார் மனைவி சினேகாவிடம் வீடியோ கால் மூலம் பேசி மீண்டும் நகை கேட்டுள்ளார். 

 

இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்