Skip to main content

தலைவிரித்தாடும் லஞ்சம்..! தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
teachers pro


புதுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு இன்று மாலையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியரியர்கள் கூட்டணியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமையில் வந்த ஆசிரியர்கள், திடீரென அதிகாரி குணசேகரன் அறையில் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கூறும்போது..

பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் காலியாகவே உள்ளதால் பல அரசு பள்ளிகள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளது. அந்த காலிப்பணியிடங்களை உடனே பதவி உயர்வின் மூலம்  நிரப்ப வேண்டும். அடுத்து இந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் எல்லா வேலைக்கும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதனால் லஞ்ச லாவண்ய போக்கை கண்டித்தும் தான் இந்த போராட்டம் என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்ட இடத்திலே அவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டும் மற்றும்  அனைத்து உடல் பரிசோதனை செய்யப்பட்டும் காணப்படுகிறது. உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ள ஆசிரியர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். 

 

 

 

 

Next Story

புதுச்சேரி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி புதுச்சேரியில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

school teachers strike



புதுச்சேரி மாநிலத்தில் பணிபுரியும் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் 7 -ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற உயர்மட்ட பேச்சு வார்த்தையின் போது  முதல்வர் நாராயணசாமி, அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். உறுதிமொழியை அறிக்கையாகவும் வெளியிட்டார். 

மேலும் சொசைட்டி கல்லூரிகளுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தப்படும் போது அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.  

இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தொடரில் சொசைட்டி கல்லூரிகளுக்கு மட்டும் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு,  அக்டோபர் மாதம் அரசு ஆணையும் வெளியிடப்பட்டது. 

ஆனால் இன்று வரை அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. உடனடியாக அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இப்போராட்டத்திற்கு கூட்டமைப்பு துணை தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமை தாங்க, தலைவர் வைர.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாசலம் சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.