Skip to main content

நாளை வாக்கு எண்ணிக்கை... நடந்து முடிந்தது திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்  தேர்தல்(படங்கள்)

Published on 22/11/2020 | Edited on 22/11/2020

 

இன்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர்- தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைமையில் இரண்டு அணிகள் தேர்தல் களத்தில் உள்ளது. 1303 உறுப்பினர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. நடந்து முடிந்த தேர்தலுக்கான வாக்குகள்   நாளை  எண்ணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பெருவாரியாக, சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

சார்ந்த செய்திகள்