Skip to main content

பாலியல் புகாருக்கு உள்ளான ராஜேஷ் தாஸின் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் 

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

 Rajesh Das' case transferred to CPCID

 

சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது. ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த புகாரானது சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

 

இதுகுறித்து  பெண் ஐ.பி.எஸ் அதிகாரி டி.ஜி.பி திரிபாதியிடம் நேரடியாக சென்று புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சி.பி.சி.ஐ.டிலுள்ள எஸ்.பி தலைமையிலான ஒரு குழுவினர் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்தப் புகாரில், புகார் கொடுக்க வந்த பெண் போலீஸ் அதிகாரியை தடுத்த செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணன் பெயரும் அந்த புகாரில் இடம் பெற்றிருந்தது. அது தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். புகாரின் அடிப்படையில் தொடர்ந்து ராஜேஷ் தாஸ் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்