Skip to main content

திருப்பத்தூரில் வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு... தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

Published on 02/04/2022 | Edited on 02/04/2022

 

Tamil Nadu Chief Minister announces relief to thirupathur incident

 

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்துள்ள புலியூரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேனில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர். அப்பொழுது செம்பரை என்ற பகுதியில் நிலை தடுமாறிய வாகனம் 50 அடி பள்ளத்திற்குள் விழுந்தது. இந்தவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்  விபத்தில் சிக்கிய  10 ஆம் வகுப்பு பயின்று வந்த ஜெயப்பிரியா என்ற மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

 

இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் ( துர்கா, பவித்ரா, சர்மிளா, செல்வன், சுகந்தா, மங்கை, ஜெயப்பிரியா) குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்