Skip to main content

ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை நாளை தொடக்கம்!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

ப

 

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்க இருக்கிறது. கடந்த முறைப் போலவே கரோனா காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதாக சட்டப்பேரவை செயலாளர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில், கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

 

அதற்கு முன்பே தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஆனால் இந்தமுறை தலைமைச் செயலகம் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த ஏற்பாடு நடந்த நிலையில், கரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் கலைவாணர் அரங்கிலேயே நாளை சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதற்காக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சில சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று இருந்துள்ளதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்