Skip to main content

சுதாகரன் விடுதலை எப்போது..? வெளியான புதிய தகவல்...

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

suthakaran release very soon

 

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சுதாகரன் ஓரிரு நாளில் விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சுதாகரன் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”ஏற்கனவே 92 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததால் பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதிக்கு முன் விடுவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார். 

 

சுதாகரனின் மனுவை ஏற்ற நீதிமன்றம், 92 நாட்களை 89 நாட்களாக குறைத்து, சுதாகரனை உடனே விடுவிக்க உத்தரவிட்டது. இருப்பினும் சுதாகரன் செலுத்திய ரூபாய் 10 கோடி அபராதத்தை நீதிமன்றம் இன்னும் ஏற்காமல் இருக்கிறது. அபராதத்தை நீதிமன்றம் ஏற்றுவிட்டால் சிறையில் இருந்து ஓரிரு நாளில் சுதாகரன் விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

சார்ந்த செய்திகள்