Skip to main content

ஆசிய கிரிக்கெட்.. சிங்கப்பூருக்காக அடித்து விளையாடிய தஞ்சை தமிழன்

Published on 31/07/2019 | Edited on 31/07/2019

 

    தமிழர்கள் எங்கே சென்றாலும் சாதிப்பார்கள்.. விளையாட்டிலும் அப்படித்தான். அப்படி சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்தியாவில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் செல்லும் இடங்களில் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வெற்றிவாகை சூடிவருகின்றனர். 

 

s


  

 2010 ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள பெருமகளூர் கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி சிங்கப்பூர் சென்றார் சுரேந்தர் சந்திரமோகன். டெக்னிசியனாக வேலை கிடைத்தது. அத்துடன் தனது ஆர்வமான கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வமாக இருந்தார். 2013 ம் ஆண்டு அதற்கான காலம் கனிந்து வந்தது. சிங்கப்பூர் கிரிக்கெட் வாரியத்தில் வாய்ப்பு கிடைத்து பேட் பிடித்தார். வாகை சூடினார். அதைப் பார்த்து அடுத்தடுத்த உலக கோப்பைகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது. 2016 ல் அதிக ரன்களை குவித்து பெயரும் புகழும் சேர்த்தார். அதே போல மலேசியாவில் 2018 ம் ஆண்டு நடந்த 8 நாடுகள் பங்கேற்ற ஆசிய போட்டியில் சிங்கப்பர் பி. டீமில் விளையாபடி 148 ரன்களை குவித்தார். 


    தற்போது நடந்த ஐ.சி.சி. பைனலில் சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், கத்தார், குவைத் போன்ற 5 நாடுகள் பங்கேற்ற போட்டியில் சுரேந்தர் பங்கேற்ற சிங்கப்பூர் அணி வெற்றி வாகை சூடியது. இதில் 105 ரன்களை குவித்திருந்தார். 

 

s

 


    தொடர்ந்து பல போட்டிகளில் ரன்களை குவித்து சிங்கப்பூருக்காக விளையாடி வரும் சுரேந்தர் சந்திரமோகனை நக்கீரன் வாழ்த்தியது. மேலும் இது குறித்து அவர் கூறும் போது.. 


    பள்ளியில் படிக்கும் போதே கிரிக்கெட் மீது ஆர்வம் உண்டு. பல ஊர்களிலும் விளையாடி வெற்றி பெற்று திரும்பியதுண்டு. ஒரு நாள் உலக கோப்பைக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. ஆனால் பிழைப்புத் தேடி சிங்கப்பூர் வரவேண்டிய சூழ்நிலை. வந்த பிறகு தான் சிங்கப்பூரிலும் வாய்ப்புகள் உள்ளதை தெரிந்து கொண்டு சிங்கப்பூர் கிரிக்கெட் வாரியத்தில் நடந்த தேர்வுகளில் பங்கேற்றேன். திறமைக்கு இங்கே பலன் உண்டு.

 

வாய்ப்புகளை கொடுத்தார்கள். நம்மை நம்பியவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது தானே நம் பன்பாடு. அதனால் தான் அத்தனை போட்டிகளிலும் வெற்றி பெறச் செய்தோம். தற்போது மற்றொரு தமிழராக சென்னையை சேர்ந்த இளைஞர் எங்கள் அணியில் இணைந்துள்ளார். இந்தியா போல சிங்கப்பூரில் அரசாங்கத்தில் இந்த விளையாட்டு இல்லை. தனி வாரியம். அதனால் விளையாடும் போது அதற்கான மதிப்பூதியம் கிடைக்கும். இந்தியா என்றால் அரசாங்கமே பல உதவிகளை செய்யும். இப்ப கூட நான் வேலை செய்யும் நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் தான் விளையாடுகிறேன் என்றார்.
    
 

சார்ந்த செய்திகள்