Skip to main content

அடிக்கடி மனுத்தாக்கல் செய்வதா..? - கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

j

 

முல்லை பெரியாறு தொடர்பாக அடிக்கடி ஏன் மனுத்தாக்கல் செய்கிறீர்கள் என்று கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

முல்லை பெரியாறு விவகாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்துக்கும், கேரளாவுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்படுத்தும் ஒரு இடமாகவே தொடர்ந்து  இருந்து வருகிறது. குறிப்பாக கடுமையான மழைக்காலங்களில் கேரளாவில் இருக்கும் முக்கிய நபர்கள் யாராவது ஒருவர் அணை உறுதி தன்மை தொடர்பாக கேள்வி எழுப்பி அதை சர்ச்சையாக்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அணை உறுதியாக உள்ளதாக நிபுணர் குழு பலமுறை சொல்லியும் கேரளாவைச் சேர்ந்த சிலர் அதனை இன்றுவரை ஏற்றுக்கொள்ள மறுத்து வருகிறார்கள். 

 

இந்நிலையில், கேரளா அரசு அணையில் நீர்திறப்பு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், " அணை பாதுகாப்பு பற்றிய தகவல் அனைத்தையும் கண்காணிப்புக் குழுவிடம் கேரள அரசு முறையிட்டுக்கொள்ளலாம். நீர் திறப்பு பற்றி 24 மணி நேரத்திற்கு முன்பு தமிழக அரசு கேரளாவிடம் கூற வேண்டும். அணை பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிப்பு குழு பார்த்துக்கொள்ளும். எனவே அடிக்கடி இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்யத் தேவையில்லை" என்று கேரளாவுக்கு அறிவுறுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்