Skip to main content

சூடான் தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கு தலா ரூபாய் 3 லட்சம்!- தமிழக அரசு!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சூடான் நாட்டில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டு மூன்று தமிழர்கள் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

sudan incident tn govt order


இந்நிலையில் உயிரிழந்த ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.



 

சார்ந்த செய்திகள்