Skip to main content

வழக்கில் வெற்றி... வேதா நிலையத்திற்குள் நுழைந்த ஜெ.தீபா! (படங்கள்)

Published on 10/12/2021 | Edited on 10/12/2021

 

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. அந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து ஜெ. தீபா இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர்.

 

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த மாதம் (24/11/2021) மதியம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார். அதில், ‘வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் தற்பொழுது ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக், தீபாவிடம் வேதா நிலையத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபா, தீபக்கிடம் ஒப்படைத்தார். சாவியை பெற்றுக்கொண்ட இருவரும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்திற்கு சென்றனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்