Skip to main content

  ஸ்டாலினும், தினகரனும் நினைப்பது ஒரு போதும் நடக்காது- அமைச்சர் காமராஜ் ஆவேசம்

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
k

 

திமுக தலைவர் ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரனும் இரண்டு வருடமாக பத்து நாட்களில் அதிமுக ஆட்சி கலைந்துவிடும், ஒரு மாதத்தில் கலைந்துவிடும், என தங்களின் தொண்டர்கள் கட்சி மாறிவிடக்கூடாது என வெற்றுப்பேச்சு பேசியே வெறுப்பை சம்பாதித்துவருகிறார்கள்"  என ஆவேசமாக பேசினார் அமைச்சர் காமராஜ்.

 

 திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ் ,"சோனியாகாந்தியை மேடையில் வைத்துக்கொண்டே ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று உளறினார். அதே ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு முன்பு வேறுவிதமாக உளறுகிறார். கூலிப்படையை சேர்ந்த சயனின் பேச்சையும் மனோஜ் பேச்சையும் கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டுமென கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்காக திமுக வழக்கறிஞர் ஆஜராகியிருப்பதில் இருந்தே யார் மீது குற்றம் உள்ளது என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதோடு ஜாமீனும் கொடுத்திருந்தார்கள். ஸ்டாலின், தினகரன் நினைப்பது போல் எதுவும் நடந்துவிடாது.


திருவாரூரில் தேர்தல் வேண்டாம் என நாங்கள் சொல்லவில்லை. திமுக நீதிமன்றத்திற்குச் சென்றது. திருவாரூரில் எப்போது தேர்தல் வந்தாலும் இரட்டை இலை சின்னம் தான் வெற்றி பெறும். 

 

அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க திருவாரூருக்கு வந்த தினகரன், அதிமுக தேர்தலை கண்டு பயப்படுகிறது என்றும் கஜாபுயலில் ஆளும் அதிமுக அரசு செயல்படவில்லை என்றும் பிதற்றிவிட்டு சென்றிருக்கிறார். புயலால் தூக்கமில்லாமல், சாப்பாடு இல்லாமல் மக்களுக்காக உழைத்திருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும்.

 

விவசாயம் என்பது ஒரு தொழில் கிடையாது, எங்களின் வாழ்க்கை முறை என தினகரன் கூறியிருப்பது நகைப்பாக இருக்கிறது.  அவருக்கு நெல்லை தெரியுமா? உழவை தெரியுமா ?  நடவுன்னா என்னன்னு தெரியுமா? அவருக்குத் தெரிந்ததெல்லாம் வேறு விஷம் மட்டும் தான். தினகரனுக்கு ஒரு ரவுண்டு தான் ஜான்ஸ், அந்த ரவுண்ட் முடிந்து விட்டது. தற்போது உள்ள நிலவரப்படி அவருக்குப்பின்னால் இருப்பவர்கள் எல்லாம் எங்களிடம் ஓடிவந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினும் தினகரனும் கூட்டு சேர்ந்து அதிமுக ஆட்சியை வீழ்த்த நினைப்பது ஒருபோதும் நடக்காது என ஆவேசமாக பேசியது பலரையும் புருவம் உயர செய்தது. 

 

சார்ந்த செய்திகள்