Skip to main content

அத்திவரதர் குறித்த பேட்டியில் மததுவேசம்! -ஸ்ரீவில்லிபுத்தூர்  ஜீயருக்கு  சம்மன்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

 

அத்திவரதர்  குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது மத உணர்வுகளைப் பாதிக்கும் விதத்தில் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சையது அலி என்பவர்  ஆன்லைனில் புகார் அளித்ததன் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர்  ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப  ராமானுஜருக்கு வரும் 22-ஆம் தேதி விசாரணைக்கு வரும்படி விருதுநகர் மாவட்ட காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 

ge


"அந்தக் காலக்கட்டத்தில், இஸ்லாமியர்களுக்குப் பயந்து விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால், இந்த அத்திவரதரையும் கீழே பூமியில் புதைத்து மறைத்து வைத்துள்ளார்கள். இப்போது நமக்கு அந்த பயம் இல்லை." என்று ஜீயர் அளித்த பேட்டிதான் அவருக்கு சம்மன் அனுப்ப வைத்துவிட்டது.
 

சார்ந்த செய்திகள்