Skip to main content

இலங்கைத் தமிழர் நலன் - ஆலோசனைக் குழுவில் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி. லெனின்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

Sri Lankan Tamil Welfare - Advisory Committee Organization!

 

இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 

 

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையிலான குழுவில், ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 பேர் கொண்ட குழுவில் நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி. லெனின், சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 

lenin

 

இக்குழுவானது, இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் முகாம்களின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்