Skip to main content

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Sri Lanka incident Nagai fishermen in sea

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த மீனவர்கள் ஆறுகாட்டுதுறையில் இருந்து கிழக்கே சுமார் 22 கடல் மைல் தொலைவில் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் படகில் ஏறி பயங்கர ஆயுதங்களைக் கொண்டு 6 மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

 

மேலும் மீனவர்களிடம் இருந்த மீன்பிடி வலை, செல்போன்கள், திசை காட்டும் கருவி ஜி.பி.எஸ்.கருவிகள், பேட்டரி, டார்ச்லைட் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்களைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

முன்னதாக கடந்த 7 ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் நாகை மீனவர்கள் 10 பேரை கைது செய்திருந்தனர். இவர்கள் 10 பேருக்கும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 10 மீனவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிந்த நிலையில், மீனவர்கள் 10 பேரையும் நீதிபதி நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டு இருந்த நிலையில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்