Skip to main content

கரும்பால் அடித்து ஆறு வயது சிறுமி கொலை... தாய் கைது!

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

A six-year-old girl  beated by sugarcane

 

திருவண்ணாமலை அருகே பெற்ற தாயே குழந்தையை கரும்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவண்ணாமலை மாவட்டம் அரடாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பூபாலன். இவருடைய மனைவி சுகன்யா. இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் வேலைக்காக பூபாலன் வெளியே சென்றிருந்த நிலையில் 6 வயது மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்துள்ளார். இதனைப் பார்த்துப் பதறிய அக்கம்பக்கத்தினர் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

 

சிறுமியின் உடலைக் கைப்பற்றிய வெறையூர் காவல்துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பூபாலன் வேலைக்காக வெளியே சென்று வரும் நேரத்தில் தாய் சுகன்யா செல்போனில் பேசுவது தொடர்பாக 6 வயது சிறுமி அவரது தந்தையிடம் கூறியதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த தாய் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பிருந்தே கடுமையாகத் தாக்கி வந்துள்ளார். இந்நிலையில் கரும்பால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தாய் சுகன்யாவை கைது செய்த வெறையூர் போலீசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற தாயே ஆறு வயது மகளை கரும்பால் அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்