Skip to main content

சங்கர் கொலை வழக்கு: 6 பேர் மேல்முறையீடு - காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 14/03/2018 | Edited on 14/03/2018
udumalai pettai


உடுமலை சங்கர் கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் தங்களது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது தொடர்பாக உடுமலை காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டார். இதன் காரணமாக கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் பட்டப்பகலில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து மரண தண்டனையை உறுதி செய்ய இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி ஜெகதீசன், தன்ராஜ், உள்பட ஆறு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மேலும் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஸ்டீபன்ராஜும், 5 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து மணிகண்டனும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், சதீஷ் குமார் அமர்வு, உடுமலை காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் - உடுமலை கௌசல்யா

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Social Activist Kausalya Interview

 

சமீபத்தில் கிருஷ்ணகிரியில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமனாரே தன்னுடைய மருமகனை ஆணவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தன்னுடைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கௌசல்யா...

 

கிருஷ்ணகிரி சம்பவத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இங்கு வர்க்க பேதத்தால் கொலை நிகழ்த்தப்படுகிறது. சொந்த சாதியாகவே இருந்தாலும் நாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை விட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால் கொலை செய்வோம் என்கிற ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கொலை. சாதி இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவள் நான். இன்றும் போராடிக் கொண்டிருக்கிறேன்.

 

பெரியாருடைய பணிகள் சாதியம் எவ்வளவு கொடூரமானது என்பதை நமக்கு உணர்த்தியது. அவருடைய பணிகளை நாம் அனைவரும் தொடர வேண்டும். ஒருவேளை சங்கருக்கு பதிலாக அன்று நான் கொல்லப்பட்டிருந்தால் அது சாதாரண கொலை வழக்காகத் தான் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்கிறோம். நிறைய பெண்களுக்கு தங்களுடைய துணையைத் தேடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதுவும் ஆணவக் குற்றம்தான். 

 

சாதி வெறி பலருக்கு ஊறிப்போய் இருக்கிறது. சாதி வெறி இல்லாமல் இருக்கும் பலரும் முற்போக்கு இயக்கங்களுடன் கைகோர்ப்பதில்லை. சாதி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கூட இங்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணங்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அப்படி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

 

அரசியல்வாதிகளும் வாக்கு வங்கிக்காக இதில் பல சமரசங்களைச் செய்துகொள்கின்றனர். இந்த விஷயத்தில் உடனடித் தேவை என்பது ஆணவக் கொலைகளுக்கு எதிரான, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவான சட்டங்கள் தான்.

 


 

Next Story

உடுமலை அருகே கார் விபத்து;சிறுமி உட்பட 4 பேர் உயிரிழப்பு

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

Car accident near Udumalai; 4 people including girl lose their live

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சரக்கு வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள நரசிங்கபுரத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் ஒன்றும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 வயது சிறுமி, ஓட்டுநர் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸாருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.