Skip to main content

மழை வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பேருந்து... போராடி மீட்கப்பட்ட குழந்தைகள்!

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

School bus stuck in rain flood...!

 


தமிழகத்தில் சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழைபொழிந்து வருகிறது. தூத்துக்குடி இளையரசனேந்தல் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் அந்தவழியாகச் சென்ற பள்ளி பேருந்து ஒன்று மழை வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.

 

அதனைத்தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் பள்ளி பேருந்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த வழியாகச் செல்லக்கூடிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்