Published on 27/01/2021 | Edited on 27/01/2021
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று (27.01.2021) காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
மெரினாவில் 50,422 சதுர அடியில், 80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவின் நான்காண்டு சிறைவாசம் காலை 10.30 மணிக்கு முடியும் நிலையில், இன்று 11 மணிக்கு ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்படுகிறது.
இந்த நினைவிட திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஜெயலலிதா நினைவிடத்தின் முகப்பில் 'மக்களால் நான் மக்களுக்காக நான் ' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.