Skip to main content

போயஸ் கார்டனை கைப்பற்ற காய் நகர்த்தும் சசிகலா! பரபரப்பு பின்னணி!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

Sasikala planing to occupy Boise Garden!

 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில், வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிப் பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பைக் கடந்த நவம்பர் 24ஆம் தேதி அன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். சேஷசாயி வழங்கினார்.

 

அதில், "வேதா நிலையத்தை அரசுடைமையாக்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் மூன்று வாரங்களில் ஒப்படைக்கச் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

 

அதேசமயம், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லைத்தை அவரது தோழி சசிகலா கைப்பற்ற திட்டம் தீட்டிவருகிறாராம். இது தொடர்பாக சசிகலாவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, ‘நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெ.வின் போயஸ் கார்டன் பங்களா, அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா வசம் வரப்போகுது. இந்த வீட்டை வாங்கத் திட்டமிடும் சசிகலா, முன்னாள் லாட்டரி அதிபர் மார்டின் மூலம் டீலிங் நடத்த காய் நகர்த்திவருகிறாராம்’ எனச் சொல்கிறார்கள். 

 

அதேபோல், போயஸ் கார்டன் வழக்கு தொடர்பாக யாராவது மேல்முறையீட்டுக்குப் போகலாம் என்பதால், தீபக் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தீபா, கார்டன் சாவியை விரைவாக தனக்கு வழங்க வேண்டும் என மனுவும் கொடுத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்