Skip to main content

உயர்தர அசைவ உணவகங்களிலும் இதே நிலையா? - திடீர் சோதனையில் அதிர்ச்சி 

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Is the same in high-end non-vegetarian restaurants?-Shocked on surprise check

 

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம், மாலை, இரவு உணவு சாப்பிட்ட பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உணவகத்தில் உணவு சாப்பிட்ட நாமக்கல் சந்தைப்பேட்டையைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டிலேயே உயிரிழந்தார். மேலும் அந்தத் தனியார் உணவகத்தில் உணவருந்திய அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் உட்பட 13 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஈரோடு, நாமக்கல், தேனி, திருச்சி, தர்மபுரி, கோவை எனப் பல்வேறு மாவட்டங்களில் அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து கெட்டுப்போன இறைச்சிகளைப் பறிமுதல் செய்தனர்.

 

சாதாரண அசைவ உணவகங்கள் மட்டுமல்லாது உயர்தர அசைவ உணவகங்களிலும் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள பிரபலமான உயர்தர அசைவ உணவுக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள ஹோட்டல் காரைக்கால், தலப்பாக்கட்டி, நாட்டுக் கோழி சமையல், நாட்டுக்கோழி வறுவல் உள்ளிட்ட பல உயர்தர அசைவ உணவுக் கடைகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சுதந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் உணவகங்களில் இருந்த கெட்டுப்போன சிக்கன், கிரில் சிக்கன், மட்டன், மீன், பரோட்டா, சப்பாத்தி, தோசை மாவு பறிமுதல் செய்யப்பட்டு அவை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்