Skip to main content

சேலம் - சென்னை விமான சேவை 10 நாட்கள் நிறுத்தம்!

Published on 14/05/2021 | Edited on 14/05/2021

 

salem to chennai flight service stopped

 

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் காலை வேளையில் சென்னையில் இருந்து சேலத்திற்கும், சேலத்தில் இருந்து சென்னைக்கும் பயணிகள் விமானம் இயக்கப்படுகிறது.

 

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் மே 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான பயணிகள் வரத்தும் குறைந்துள்ளது.

 

இதே நிலையில் பயணிகள் விமானத்தை இயக்கினால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படுவதோடு, விமான சிப்பந்திகளுக்கும் நோய்த்தொற்று அபாயம் ஏற்படும். 

 

இதையடுத்து, வியாழக்கிழமை (மே 13) முதல் வரும் 22ஆம் தேதிவரை தொடர்ந்து 10 நாட்களுக்கு சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேநேரம், அலுவலக பணிகள், அவசரத் தேவை, மருத்துவத் தேவைகளுக்காக மட்டும் விமான சேவை தொடர்ந்து இயக்கப்படும் என காமலாபுரம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திர வர்மா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்