Skip to main content

சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - சரத்குமார் 

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
sabarimala


    
சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 
 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் சரத்குமார் கலந்து கொண்டார். அவர் தாமிரபரணியில் புனித நீராடி கைசலாநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நதியின் புனிதத்தை உணர்ந்து இந்த பகுதியில் அதிகமானோர் நீராடுகின்றனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த புஷ்கர விழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நதியில் ஆண்டுதோறும் புஷ்கர விழா நடந்தாலும் சரி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்தாலும் சரி, பொதுமக்களின் ஊக்கமும், அரசு சார்பிலும் இந்த பகுதியில் சாலை வசதிகளும், உடைமாற்றும் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 

புஷ்கரவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டிய அவசியமில்லை. புஷ்கர விழா இறைவனுக்காக கொண்டாடப்படுவது. அரசு அதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளை செய்து கொடுத்தாலே போதும்.
 

ஆகமவிதிகளின் படி உருவாக்கப்பட்டிருக்கின்ற எந்தவித ஸ்தலமாக இருந்தாலும் சரி ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கின்ற பாரம்பரியத்தையும் நம்பிக்கையும் காப்பாற்றப்பட வேண்டும்.
 

சபரிமலை விவகாரத்தில் இதை உடைக்கின்ற மாதிரி இந்த தீர்ப்பு உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்