Skip to main content

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு- அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

Published on 17/01/2022 | Edited on 17/01/2022

 

Reservation for Urban Local Government Elections - Government of Tamil Nadu Announced!

 

தமிழ்நாட்டில் நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டை அறிவித்து, அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அரசாணையில் சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கான இடஓதுக்கீடு குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியும் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின் (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சி மேயர் பதவியும் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்