Skip to main content

பத்திரிகையாளர்கள் சந்திப்பில்... பார்வையற்ற இசை கலைஞர்கள் விடுத்த வேண்டுகோள்...!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

At the press conference a request made by blind musicians

 

பார்வையற்றோர் மெல்லிசைக் கலைஞர்கள் நல சங்கம் சார்பில், இன்று (03.03.2021) திருச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவர் முருகன், துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், பொதுச் செயலாளர் வரதராஜன் உள்ளிட்டோர், அரசுக்கு தாங்கள் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் முக்கியமான சில கோரிக்கைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். 

 

“முதலாவதாக, பார்வையற்ற இசைக் கலைஞர்களுக்கு என்று நலவாரியம் உருவாக்கப்பட வேண்டும். அதில் பார்வையற்ற இசைக்கலைஞர்களை முக்கியப் பிரதிநிதியாக வைக்க வேண்டும். வயது வரம்பின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். பார்வையற்ற இசைக்கலைஞர்கள் கொண்டு செல்கிற இசைக் கருவிகளுக்குக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மறைந்த பாடகர் எஸ்பிபி அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். 

 

அரசுப் பேருந்துகள் மற்றும் இடைநில்லா பேருந்துகளிலும் அரசுப் பேருந்துகளில் வழங்கப்படுகின்ற 25 சதவீத கட்டணத்தையே பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்ட இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் இயல் இசை நாடக மன்ற உதவித்தொகையை எந்த நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும். அரசு நடத்தக்கூடிய கண்காட்சிகள், பொருட்காட்சிகளில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்