Skip to main content

 ஆட்சிக்கு ஆபத்தில்லை; ஆனால், மக்களுக்கு பெரும் ஆபத்து! ஸ்டாலின்

Published on 14/06/2018 | Edited on 14/06/2018
sst

 

தி.மு.க. செயல் தலைவர் செய்தியாளர் சந்திப்பின்போது, இன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, 

           ’’இருவேறு மாறுபட்ட கருத்துகள் வந்துள்ளதால், தற்போது ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனால், மக்களுக்கு பெரும் ஆபத்து’’என்று பதிலளித்தார்.


இதையடுத்து ஸ்டாலின் தனது டுவிட்டரில்,  ‘’ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்’’என்று பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்