Skip to main content

திமுகவில் இணையும் முன்னாள் அமைச்சர்! மதுரையில் இணைப்பு விழா 

Published on 07/02/2020 | Edited on 07/02/2020
r


ஜெ. தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன்.  கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 2000-ம் ஆண்டில் ’மக்கள் தமிழ் தேசம்’ எனும் பெயரில் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர், 2006-ம் ஆண்டு தி.மு.க.வில் தனது கட்சியை இணைத்தார். இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ல் மீண்டும் அ.தி.மு.க.விற்கு திரும்பினார்.

 

k

 

அ.தி.மு.க.வினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜ கண்ணப்பன் சிறிது காலம் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். தற்போது அவர் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளார்.

 

r

 

மதுரையில் வரும் 23-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணைகிறார். இந்த இணைப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  இதனை பார்வையிட ராஜ கண்ணப்பன் மதுரை வந்தார். 

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ கண்ணப்பன்,  ‘’ எதிர்காலத்தில் தமிழகத்தை வழிநடத்த சரியான தலைவர் மு.க.ஸ்டாலின்தான். அதனால் அவரோடு இணைந்து செயல்பட உள்ளோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற அவரோடு இணைந்து பணியாற்றுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்