Skip to main content

21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்குக;ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
thilakar thital

 

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாதகால ஓய்வூதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் ஓய்வூதியர்கள் திங்கள்கிழமையன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் பி.ஆழ்வாரப்பன், என்.ராமச்சந்திரன், ஆர்.முருகேசன், எம்.வெள்ளைச்சாமி, ஆர்.ராஜேந்திரசிங் மற்றும் வட்டார நிர்வாகிள் உள்ளிட்டோர் பேசினர். போராட்டத்தை ஆதரித்து அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், செயலாளர் ஆர்.ரெங்கசாமி, வருவாயத்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் சுபா, முன்னாள் மாநில துணைத் தலைவர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர்.

 

ஓய்வுபெற்ற ஊழியர்களை தரம்பிரிக்காமல் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்.. உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை ஓய்வூதியர்களுக்கும் ஊதியக்குழு ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும். தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாதகால ஓய்வூதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்கவதைப் போல மருத்துவப்படியாக மாதத்திற்கு ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வருமான வரிச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக பேருந்துக்கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். இன்சூரன்ஸ் திட்டத்தில் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின்போது எழுப்பப்பட்டன.

 

- பகத்சிங்

சார்ந்த செய்திகள்