Skip to main content

சேலம் மத்திய சிறையில் கைதி திடீர் மரணம்..!

Published on 03/02/2021 | Edited on 03/02/2021

 

Prisoner passes away in Salem Central Jail

 

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்துள்ள ஆட்டுக்காரனூரைச் சேர்ந்தவர் முகமது மீரான் (56). கஞ்சா வியாபாரியான இவர், கடந்த மாதம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர்.

 

இதையடுத்து, முகமது மீரான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (பிப். 2) அதிகாலை அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது. சிறைத்துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே முகமது மீரான் பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதையடுத்து அவருடைய உடல், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறைக் கைதி இறந்தது குறித்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடந்து வருகிறது. அஸ்தம்பட்டி காவல்துறையினரும் விசாரித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்