Skip to main content

சினிமாவிற்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர் உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம்!!

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

சினிமாவிற்காக இறந்துவிட்டதாக தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி ஒட்டிய வில்லன் நடிகர் அதற்கு அடுத்த சில தினங்களிலேயே உண்மையாகவே இறந்தது போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 The poster of tears for the cinema was a truly inciden


தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆர்.எஸ்.கோபால். நகர ரஜினி ரசிகர் மன்ற செயலாளராக பொறுப்பு வகித்தவர் இவர். ''பூதமங்கலம் போஸ்ட்''  என்ற திரைப்படத்தில்  வட்டம் வரதன் என்ற வில்லன் வேடத்தில் நடித்து வந்த இவர் சினிமாவில் வில்லன் நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசையில் சின்னச்சின்ன திரைப்படங்களில் நடித்து வந்தார். அண்மையில் அவர் நடித்த திரைப்படம் ஒன்றில் அவர் இறந்து போவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததால் ஊர் முழுவதும் அவர் புகைப்படம் இடம்பெற்ற கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

 The poster of tears for the cinema was a truly inciden

 

 The poster of tears for the cinema was a truly inciden

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர் உண்மையாகவே இறந்து விட்டார் என நினைத்து அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்கச் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் வெளியே அமர்ந்திருந்த கோபால் தான் வில்லனாக நடிக்கும் படத்தில் அந்த வில்லன் கதாபாத்திரம் இறந்து போவது போல் காட்சிகள் இருப்பதால் அதற்காக அப்படி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அது சினிமாவிற்காக ஒட்டப்பட்ட போஸ்டர் என தெரிவித்துள்ளார். அதேபோல் அவர் இறந்து சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருப்பது போலவும், அருகில் பெண்கள் ஒப்பாரி வைப்பது போலவும் சினிமா காட்சிகள் எடுக்கப்பட்ட போது எடுத்த  புகைப்படங்களை வாட்ஸ் அப் மூலமும் நண்பர்களுக்கு பகிர்ந்திருந்தார்.

 The poster of tears for the cinema was a truly inciden


இந்த போஸ்டர் மற்றும் புகைப்படம் இரண்டும் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் அதே காயல்பட்டினத்தில் மிகவும் பிரபலமானவர், ''பானை முதல் யானை வரை கிடைக்கும்'' என்ற ஒரு கடையும் வைத்திருந்தார். இதனால் அவர் உண்மையாகவே இறந்துவிட்டதாக பலர் அவர் வீட்டிற்குச் விசாரிக்க சென்றனர். இதற்கு விளக்கமளித்த அவர் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை அவரே தன் கையாலே கிழித்துப் போட்டார்.

 The poster of tears for the cinema was a truly inciden The poster of tears for the cinema was a truly inciden

இப்படியிருக்க மீண்டும் ஆர்.எஸ்.கோபால் இறந்ததாக காயல்பட்டினம் பகுதியில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் இதனையும் சினிமாவிற்காக அவர் ஒட்டியிருக்கலாம் என அப்பகுதி மக்கள் நினைத்துக்கொண்டு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, யாரும் செல்லவில்லை.

 The poster of tears for the cinema was a truly inciden


ஆனால் உடல் நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆர்.எஸ்.கோபால் உண்மையிலேயே உயிரிழந்தது தாமதமாக அனைவருக்கும் தெரியவந்தது. அதன் பின்னர்தான் அந்த பகுதி மக்கள் ஆர்.எஸ்.கோபாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர். இப்படி சினிமாவிற்காக தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய வில்லன் நடிகர் சில நாட்களில் உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்