Skip to main content

’ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் செய்யும் யுக்தி!’ - எரிச்சலடைந்த ரசிகர்கள்

Published on 23/09/2018 | Edited on 23/09/2018
is

 

பிக்பாஸ் வீட்டில் இருந்து பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர்.  ஆனால், ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த எவிக்‌ஷன் ஐஸ்வர்யாதான்.  அவர் வெளியேற்றப்படாததால் தொடர்ந்து காப்பாற்றப்படும் ஐஸ்வர்யாவால்  ரசிகர்கள் பிக்பாஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் -2 இன்னும் ஒரு வாரத்தில் நிறைவு பகுதிக்கு வருகிறது.  பிக்பாஸ்-1 100 நாள்தான்.  ஆனால், பிக்பாஸ் -2வில் 5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.   வழக்கமாக ஞாயிறு மட்டும் எவிக்‌ஷன் இருக்கும்.  


   இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கிறது என்று சென்ற வாரமே கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.  அதாவது  சனிக்கிழமை ஒருவரும்,  ஞாயிற்றுக்கிழமை ஒருவரும் வெளியேற்றப்படுவார்கள்.  அதன்படி சனிக்கிழமை நேற்று பாலாஜி வெளியேற்றப்பட்டார்.  வெளியேற்றப்படுகிறீர்கள் என்று கமல்ஹாசன் அறிவித்ததும், பாலாஜி கொஞ்ச நேரம் அப்செட்.  அவரது முகம்  இறுக்கமாக இருந்தது.  பின்னர் கஷ்டப்பட்டு சிரித்தபடியே வெளியேறினார்.  ’இதே கடந்த பிக்பாஸாக இருந்தால் நீங்கள் இறுதிபோட்டியாளர்.  இந்த சீசனில்  5 நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அந்த வாய்ப்பு உங்களுக்கு நழுவியிருக்கிறது’என்று கமல் ஆறுதல் கூறியபோதும், கஷ்டப்பட்டு சிரித்தார் பாலாஜி.

 

ai

 

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியேற்றப்படுகிறார்.  பிக்பாஸ் -2 இன் துவக்கத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஐஸ்வர்யா  கடைசி வரை வெளியேற்றப்படாமல் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார்.  ஓட்டுக்களின் அடிப்படையில் அவர் காப்பாற்றப்பட்டார் என்று கமல் அறிவித்தாலும், ரசிகர்கள் பெரும்பான்மையினர் ஐஸ்வர்யாவுக்கு எதிராக இருக்கும்போது எப்படி அவருக்கு ஓட்டுகள் அதிகம் விழும்.  விளையாட்டில் யுக்தி வைக்கும் ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக்பாஸ் செய்யும் யுக்தியா இது  என்று ரசிகர்கள் எரிச்சலடைந்துள்ளனர்.  

 


 

சார்ந்த செய்திகள்