Skip to main content

பெட்ரோல், டீசல் விலையில் கட்டுப்பாட்டை கொண்டுவர வேண்டும் ஜி.கே.வாசன்

Published on 22/04/2018 | Edited on 22/04/2018
petrol bunk


 

பெட்ரோல், டீசல் விலையில் கட்டுப்பாட்டை கொண்டு வர நடவடிக்கை மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, 
 

கடந்த 10 மாதங்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் என்ற பெயரில் உயர்த்தியதால் தற்போது ரூ.11.49 அளவிற்கு உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.68.90 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இப்படி பெட்ரோல், டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் என்று கூறும் இந்திய ஆயில் நிறுவனம் அதன் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு விற்று வருகிறது. இது ஏற்புடையதல்ல.
 

gkvasan


 

எனவே, மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை ரத்து செய்து, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். மேலும் பெட்ரோல், டீசல் விலை மீதான மாநில அரசின் வரியும் ரத்து செய்யப்பட வேண்டும். அதன் மூலம் இனி வருங்காலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்து பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்