Skip to main content

100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது... விசாரணையில் அதிர்ச்சியான போலீசார்...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

 

சமூக வலைதளத்தில் போலியான கணக்குகளை உருவாக்கி, ஏராளமான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடம் விசாரணை நடத்தி 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் படங்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

 

 Shock



பெண்கள் சிலரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சிபுரம் அடுத்த பெரிய காஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கெய்ஷ்முகமது என்பவரை கண்காணித்தனர். மேலும் அவரது நடவடிக்கை மற்றும் சமூக வலைதள பக்கத்தை கண்காணித்தனர்.


 

 

இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், கெய்ஷ் முகமதுவுக்கு ஏற்கனவே அறிமுகமான இளம்பெண் ஒருவர் மூலம் செல்போனில் பேச வைத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார் கெய்ஷ் முகமதுவை கைது செய்தனர்.
 

விசாரணையின்போது போலீசாரிடம், ‘ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பேன். இதனால் அனைத்து பெண்களின் புகைப்படங்களையும் மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு பார்த்து அனுபவிப்பேன். எனது உறவினர் புகைப்படத்தையும் இதே போல் செய்தேன்.


 

 

பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் செல்லும் பெண்களையும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளையும் அவர்களுக்கே தெரியாமல் படம் எடுப்பேன். பின்னர் அதனை ஆபாசமாக மாற்றி போலியான சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தேன்’ என்று கெய்ஷ் முகமது கூறியுள்ளார். உடன் பணியாற்றும் பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களையே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் இவர் பதிவேற்றம் செய்திருப்பதாக சொன்னது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 

 

இதையடுத்து அவரது செல்போனில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் படங்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர். சமூக வலைதள பக்கத்தில் உள்ள இளம்பெண்களின் ஆபாச படத்தை அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீசாரின் விசாரணைக்குப் பிறகு கெய்ஷ் முகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 

 


 

சார்ந்த செய்திகள்